ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்- பெற்றோர் போலீசில் புகார்

மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்- பெற்றோர் போலீசில் புகார்
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் பைப்லைன் அமைக்கும் பணிக்காக ஓமலூர் அருகே குதிரை குத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மோகன், பெருமாள் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் அருகில் இருந்த மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தபட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானார்.

இதுகுறிதது சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக பெருமாள் (25) என்பவர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com