என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி- டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 60 சதவீதம் அதிகரிப்பு
    X

    கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி- டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 60 சதவீதம் அதிகரிப்பு

    • கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது.
    • கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதுமே மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்கின்றனர். அதிலும் குளிரூட்டப்பட்ட 'பீர்' வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் 'பீர்' விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது.

    அதன்படி கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது. மார்ச் மாத இறுதியில் 'பீர்' விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை தேடிச்சென்றனர். ஆனால் மதுப்பிரியர்களோ 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 180 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    வழக்கமான விற்பனையில் இருந்து பீர் வகைகள் விற்பனை 60 சதவீதம் கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×