கோவில் திருவிழாக்களில் கிரேன் பயன்படுத்த தடை

கிரேன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும்.
கோவில் திருவிழாக்களில் கிரேன் பயன்படுத்த தடை
Published on

நெமிலி:

வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கிரேன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில்:-

இதுபோன்ற விபத்துக்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க கிரேன் போன்றவற்றை பயன்படுத்த தடை விக்கப்படும்.

மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com