யானைகள் மீண்டும் முற்றுகையிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானைகள் மீண்டும் முற்றுகையிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை
Published on

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் முக்கிய சாலைகள், வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி செல்லும் பகுதி பேரிஜம் ஏரியாகும். இங்கு செல்வதற்கு மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இங்கு தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகு பார்வை பகுதி, அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் நிறைந்து காணப்படுகிறது. இதையொட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வப்போது பேரிஜம் ஏரியில் முகாமிட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டம் அங்கு நடமாடுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தடை விதிக்கப்பட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com