நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான் - அரவிந்த் கெஜ்ரிவால்

வாரிசு அரசியலை விமர்சனம் செய்யும் பாஜகவினர் தங்களது பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும்.
நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான் - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

சென்னை கிண்டியில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான்.

* பாஜக கட்சி வெற்றி பெறக்கூடாது என தமிழக மக்கள் நினைக்கின்றனர்.

* தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

* வாரிசு அரசியலை விமர்சனம் செய்யும் பாஜகவினர் தங்களது பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும்.

* பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது.

* வாக்களித்த ஒரு ஆண்டிலேயே டெல்லி பாஜக அரசை மக்கள் வெறுத்து விட்டனர்.

* தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது.

* தேசிய அளவில் மு.க.ஸ்டாலினின் குரல் மிகவும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

* நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com