என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முடியாதா? - சாதனை படைத்த இளைஞர்
- மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.
- முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாப்பையா-சுப்புலட்சுமி தம்பதியின் மகன் அருண்குமார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
சிறுவயது முதலே ஏதாவது சாதனை படைத்து பலரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் அருண்குமார்.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உன்னால முடியாது என்று சொல்வது இவருக்கு ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் இதை கின்னஸ் சாதனையாக செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்கு தோன்றி உள்ளது.
இதுதொடர்பாக அருண்குமார் கூறுகையில்,
தினமும் தலைகீழாக நின்று பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன்.
தண்ணீர் குடித்தால் முதலில் சிரசில் அடித்து விடும். பிரஷர் தாங்காமல் மூக்கில் இருந்து ரத்தம் கூட வந்து இருக்கிறது. ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தது.
தலைகீழாக நின்று கொண்டு 1 டம்ளர் தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன். பின்னர் 2 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் தண்ணீர் என பயிற்சி எடுத்தேன்.
மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.
இந்த பயிற்சிக்குப்பின்னர் தலைகீழாக நின்று 25.01 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடித்து அருண்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பலர் ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை என்று கூறினாலும் எனது அம்மா, சகோதரர்கள், நண்பர்கள் உன்னால் முடியும் என்று கூறியதால் தான் என்னால் சாதிக்க முடிந்தது.
முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.
என்னதான் அத்தனை பேரும் ஊக்கப்படுத்தினாலும், 'வலிமை' படத்தில் நடிகர் அஜித்தின் பைக் ஸ்டண்ட் பார்த்து தான் முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையே வந்ததாக அருண்குமார் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று அருண்குமார் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் உள்ளவர்களை ஊக்குவிப்பது போன்று சாதனை படைத்தவர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






