தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின்பேரில் சோதனை நடந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
Published on

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 மாநகராட்சி மற்றும் ஊராட்சி மண்டல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் உட்பட பல மண்டல அலுவலகங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.

நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.  திருமங்கலம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரினை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயில்களை மூடிவிட்டு சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆவணங்கள் மற்றும் அலுவலகப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த அதிரடிச் சோதனை உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களுக்குள் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com