விருதுநகரில் மீட்புப் பணியின்போது மீண்டும் வெடி விபத்து- 8 பேர் காயம்

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகரில் மீட்புப் பணியின்போது மீண்டும் வெடி விபத்து- 8 பேர் காயம்
Published on

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

அரசு அனுமதியுடன் இயங்கிவரும் ஆலையில் வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, போலீசார், தீயணைப்பு துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடிரென மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், போலீசார், தீயணைப்பு துறையினர் என 8 பேர் காயமடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com