அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கை!..

'We The Leaders' அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலைக்குக் குவியும் மக்கள் ஆதரவு!..
Annamalai
Annamalai
Published on

பாஜகவிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜூன் 5 அன்று 'We The Leaders' என்ற இயக்கத்தை தொடங்கினார்.

'இந்த இயக்கம் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல; இது சாமானிய மக்களின் இயக்கம்' என்று கூறி வருகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர் தலைமைத்துவம், தரமான இலவசக் கல்வி, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மைக் கொள்கைகளாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தை துவங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இயக்கம் தொடங்கப்பட்ட ஜூன் 5 ஆம் தேதி மாலை முதலே, அண்ணாமலையின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் இணையதளத்தில் குவிந்தனர்.

இயக்கம் தொடங்கப்பட்ட முதல் சில மணி நேரங்களிலேயே 5 லட்சம் பேர் பதிவு செய்தனர்.

நேற்று (ஜூன் 6) 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இன்று (ஜூன் 7) மதியநேர நிலவரப்படி, ஆன்லைன் மூலம் இணைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மூன்று நாட்களில் இத்தனை லட்சம் பேர் ஒரு புதிய இயக்கத்தில் இணைந்தது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு முக்கியப் பதிவாகப் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com