ஜூன் 30 ல் சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மீண்டும் குறுக்கு விசாரணை

அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலை- டிஆர் பாலு
Published on

தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு மீது கப்பல் வாங்கியது குறித்த குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலையொட்டி இந்த வழக்கு தள்ளி போனது. வருகிற 30-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com