என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணாவின் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி அமைதி பேரணி
    X

    அண்ணாவின் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி அமைதி பேரணி

    • அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும்.
    • அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இதையொட்டி அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும். இதில் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×