

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த 15 பேருமே பெண் தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் 11 பேர் ஒடிசாவையும், 2 பேர் அசாமையும், எஞ்சியோர் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். மேலும் 10க்கும் மேற்பட்டோர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் 15 வயது சிறுமிகள். தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.