

சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாளான இன்று சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருஉருவச்சிலைக்கு, அதிமுக சார்பில், கழக அவைத்தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக செய்தித் தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம். பாபு முருகவேல் (முன்னாள் எம்.எல்.ஏ.), கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் டி. மாறன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி. சிவராஜ் (தியாகராயநகர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர்) எம். வெங்கடேசன் (எ) இ.எம். வெங்கட்,
தியாகராயநகர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் திரு. மு. உதயா (எ) மு. உதயன், தியாகராயநகர் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர் ஆர். சிவசாமி வேலுமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.