மீண்டும் வெளியாகும் 'அமர்க்களம்'- ரசிகர்கள் குஷி

நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெளியாகும் 'அமர்க்களம்'- ரசிகர்கள் குஷி
Published on

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.

இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com