

சென்னையில் இரவு 10 மணிக்குள் டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
விதிமுறைகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
FL2 & FL3 கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 90 நாட்களுக்கு மேல் கொலை வழக்குகள் விசாரணையில் இருக்கக் கூடாது.
போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.