அஜித் குமார் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது

அஜித் குமார் தாயார் உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அஜித் குமார் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் கார் பந்தய வீரரும் கூட. சர்வதேச கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ளும் அவர், தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம், கடந்த 2023-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

அஜித் குமாரின் தாயார் மோகினி மணி என்ற மோகினி சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்திலேயே வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மோகினி மணி (84) நேற்று உயிரிழந்தார். தாயார் உயிரிழந்த தகவல் அறிந்து அஜித் குமார் துபாயில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார்.

அஜித் குமார் தாயார் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் குமார் தாயார் உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜித் குமார் தாயாரின் உடல் தகனம் இன்று நடைபெற்றது. ஈஞ்சம்பாக்கத்தில இருந்து பெசன்ட் நகர் மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அமரர் ஊர்தியை பின் தொடர்ந்து அஜித் மற்றும் அவரது உறவினர்கள் காரில் சென்றனர்.

அதைத்தொடர்ந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு மறைந்த தாயின் உடலை நடிகர் அஜித்குமார் சுமந்து சென்றார். இறுதிச்சடங்கிற்கு பிறகு அவரது தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com