ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, அமமுக

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர், அமைச்சர் டிஆர்பி ராஜாவை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, அமமுக
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 11 இடங்களில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணி 50 இடத்திற்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அமமுக ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மன்னார்குடி தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் எஸ். காமராஜ் 1566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 68416 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா 66,850 வாக்குகள் பெற்றார். த.வெ.க. வேட்பாளர் ராஜராஜன் 44266 வாக்குகள் பெற்றார்.

பாஜக-வின் தாமரை சின்னம் 33 இடங்களில் போட்டியிட்டது. இதில் உதகை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் போஜராஜன் 48488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். த.வெ.க. வேட்பாளர் இப்ராஹிம் 47512 வாக்குகள் பெற்று 976 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com