

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நிர்வாகரீதியாக மாற்றங்கள் எடுக்கப்படும்.
அந்தவகையில் தற்போது முதலமைச்சர் விஜய்யின் முதன்மை செயலாளராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலராக இருந்தவர் செந்தில்குமார். தற்போது அவர் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமி பிரியா விஜய்யின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.