பெரியாரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்- த.வெ.க.வினருக்கு சத்யராஜ் அறிவுரை

பா.ஜ.க.வினரும் பெரியாரை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த புத்தகத்தை தூக்கி எறிந்து விடுங்கள்.
சத்யராஜ்
Published on

கோவை மாவட்டம் அன்னூர் அருகே காரே கவுண்டம்பாளையம் நல்லிசெட்டிபாளையத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் முழு உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:-

கொள்கை தலைவர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் உள்ளிட்டவரை அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணங்கள் தொலைநோக்கு சிந்தனைகள் பற்றி அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு பெரிய அளவுக்கு புரிதல் இல்லை. முதலில் அந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், நண்பா, நண்பிகள் அனைவரும் பெரியார் என்றால் யார்? அவர் என்ன செய்தார்? அம்பேத்கர் என்ன செய்தார்? என்பது குறித்து புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலைவர் விஜய் ஏற்றுக்கொண்ட கொள்கை தலைவரை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தெளிவான அரசியல் பார்வை இருக்கும். எனவே முதலில் அதனை தெரிந்து கொள்ளுங்கள்.

தூக்கி எறியுங்கள்

அதேபோல் பா.ஜ.க.வினரும் பெரியாரை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த புத்தகத்தை தூக்கி எறிந்து விடுங்கள். அதைத்தான் பெரியார் சொல்லிக் கொடுத்துள்ளார். தி.மு.க.வில் தற்போது ஜென் இசட் இளைஞர் அமைப்பினர் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com