லால்குடி தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி- வேலைக்காரனை தேர்ந்தெடுங்கள் என அதிரடி பிரசாரம்

தமிழ்நாடெங்கும் போதைப்பொருள் சிறுவர்களுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்கிறது.
லால்குடி தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி- வேலைக்காரனை தேர்ந்தெடுங்கள் என அதிரடி பிரசாரம்
Published on

தமிழ் திரை உலகில் வில்லன் நடிகராக மக்களை கவர்ந்து வருபவர் மன்சூர் அலிகான். அவரது யதார்த்தமான பேச்சும், இயல்பான நடிப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அவருக்கென தனி இடம் இருந்து வருகிறது.

மன்சூர் அலிகான் நடிகராக மட்டுமின்றி இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லால்குடியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லீமா மார்ட்டின் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியி டுவது குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது:-

நான் 2011-லேயே திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். நான் வளர்ந்த ஊர் பள்ளப்பட்டி. திருச்சி மாவட்டத்தில் இருந்தது. நாங்கள் இந்திய ஜனநாயகப்புலிகள் சார்பாக தி.மு.கவில் சீட் கேட்டோம். 6 மாதமாக அலைந்தோம் பிறகு எடப்பாடியாரை சந்தித்து சில முறை பேசினேன். யாரும் கண்டுக் கொள்ளாததால் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.

லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இங்கு 10 முறை 5 முறை வென்றவர்களால் வாழை சாகுபடி விவசாயிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தமிழ்நாடெங்கும் போதைப்பொருள் சிறுவர்களுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்கிறது. போலீஸ் துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் எங்களுக்கு நிச்சயமாய் வாக்களிப்பர். வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்க உள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com