சென்னையில் சப்ளை குறைக்கப்பட்டதா? ஆவின் விளக்கம்

பால் விநியோகம் வழக்கமான செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் தற்போதைய நுகர்வோர் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆவின்
ஆவின்
Published on

ஆவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ பகுதியில் ஆவின் பால் சப்ளையை குறைத்துள்ளதாகவும், சில குறிப்பிட்ட வகை பால் விநியோகம் குறைக்கப்பட்டதாகவும் ஒரு சில குறிப்பிட்ட மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் உண்மைகளுக்கு முரணானவை; இவை எதார்த்தமான நிலையை வெளிப்படுத்தவில்லை.

சென்னை மெட்ரோ பகுதியில் அனைத்து வகையான பாக்கெட் பால்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது. ஒரு நாளைக்கு தோராயமான 14.50 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாளைக்கு 14.46 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் ஜூன் மாதத்தில் 14.8 லட்சம் லிட்டர் ஆகும். இது 36 ஆயிரம் லிட்டர் அதிகமாகும். எந்தவொரு வகையான பால் விற்பனையும் குறைக்கப்படவில்லை.

பால் விநியோகம் வழக்கமான செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் தற்போதைய நுகர்வோர் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனது நிறுவப்பட்ட விநியோகக் கட்டமைப்பின் மூலம் நுகர்வோருக்குத் தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்வதில் ஆவின் நிறுவனம் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.

இதுபோன்ற தவறான தகவல்களால் பொதுமக்களும் நுகர்வோரும் தவறாக வழி நடத்தப்பட வேண்டாம் என்றும், ஆவின் பால் விநியோகம் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் உறுதியளிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com