ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு

திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு
Published on

தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.

இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா அரங்கிற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை புரிந்தார். ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com