

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 04) எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இரக்கிறது.
இந்த நிலையில், த.வெ.க. நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில் அவர், "தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்," என குறிப்பிட்டுள்ளார்.