தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபருக்கு தர்ம அடி

இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபருக்கு தர்ம அடி
Published on

சென்னை தி.நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com