என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24-ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
- புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24-ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.






