புழல் ஜெயில் கழிவறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை

போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் ஜெயில் கழிவறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை
Published on

செங்குன்றம்:

மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.

இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com