விஜய் பதவி ஏற்பு விழா: நேரு மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

விஜய் பதவி ஏற்க இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஜய் பதவி ஏற்பு விழா: நேரு மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அவருடைய பதவி ஏற்பு விழாவைக் காண ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் உள்பட பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். மூன்று நுழைவாயில் இரண்டு வாயில்கள் மூலும் பொதுமக்கள் மற்றும் விஐபி-க்கள் வருகை தர இருக்கிறார்கள்.

இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஜய் வரும் வழி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com