ஸ்ரீபெரும்புதூர் அருகே பயிற்சியின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி

தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயிற்சியின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களது மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது6), சித்திக் வைபவ். சஸ்வின் வைபவ் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் சஸ்வின் வைபவ் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.

சிறுவன் சஸ்வின் வை பவ் நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக் வைபவுக்கு உணவு கொடுக்க நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான். அவனை தேடிய போது நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவனது உடலைபார்த்து தாரிகா அலறி துடித்தார்.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com