

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதனால் நாளை இந்தியா முழுவதும் 12.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் கடை அடைப்பில் ஈடுபட உள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 42,000 மருந்தகங்கள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, அவசரத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டில் 5,000 மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்,
“மருந்து விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு அறிவித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில் 5,000 கடைகள் நாளை(மே 20) இயங்கும்” என தெரிவித்துள்ளார்.