இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (25) கோவிலூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பதும் அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com