புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
கொள்ளை போன வீட்டில் பீரோ உடைக்கப்பட்டுள்ள காட்சி.
கொள்ளை போன வீட்டில் பீரோ உடைக்கப்பட்டுள்ள காட்சி.
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கலீப் நகர் 1-ம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையே அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உதவியாக அவரது மனைவியும் மருத்துவமனையில் தங்கியிருந்து கவனித்து வருகிறார்.

சரவணனின் பிள்ளைகள் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கே தங்கியுள்ளனர். கலீப் நகரில் உள்ள வீடு பூட்டப்பட்டு கிடந்தது. யாரும் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோ லாக்கரில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைப்பதற்காக கொண்டு வந்த இரும்பு ராடையும், உடைத்த கேட்டையும் சரவணன் வீட்டின் அடுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பின்புறமுள்ள வீட்டிலேயே அச்சமின்றி கொள்ளையர்கள் புகுந்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com