எல்லைத் தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை அகதிகள் கைது

இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
எல்லைத் தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை அகதிகள் கைது
Published on

ராமேசுவரம்:

இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com