

மே தினம் மற்றும் சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று முதல் இன்று அதிகாலை 3 மணி வரை 2,092 வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1784 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,876 பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு பஸ்கள் மூலம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 180 பேர் ஒரே நாளில் பயணம் செய்துள்ளனர். மேலும் இன்று பொது மக்களின் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளனர். இது தவிர தனியார் ஆம்னி பஸ்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.