மாதவரத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

மாத்தூர் டோல்கேட் பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மாதவரத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
Published on

சென்னை மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு சிறார்களை, காவலர் எஸ்.ஐ.ஜெய்சங்கர், தலைமை காவலர் வெங்கடேச பெருமாள் இருவரும் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டு சிறார்களையும் மாதவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், மாத்தூர் டோல்கேட் பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதன் பேரில், காவல் ஆய்வாளர் காதர் மீரான் தலைமையில் எஸ்.ஐ ஜெய்சங்கர், எஸ்.ஐ அம்ரூஸ், தலைமை காவலர்கள் வெங்கடேச பெருமாள், சிவக்குமார், மனோஜ், பிரபாகரன் மற்றும் முதல் நிலை காவலர் சிவராமன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் மாத்தூர் டோல்கேட் பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து 20.500 கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் திருமுல்லைவாயிலை சேர்ந்த கதிர்வேலு வயது 40 மற்றும் மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி வயது 27 ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com