+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகின. இந்த ஆண்டு மொத்தம் 95.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 93.19% தேர்ச்சியும், மாணவிகள் 97% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

இதில் ஈரோடு மாவட்டம் 98.24% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்நிலையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13 வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com