சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை!

மாவட்ட நீதிபதிகள் 9 பேர், மூத்த வழக்கறிஞர்கள் 10 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை!
Published on

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 25 நீதிபதிகள் பணியிடங்களில், 19 பேரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்றக் கொலிஜியம் நேற்று நடத்தியக் கூட்டத்தில் இந்த நியமனங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதிகள் 9 பேர், மூத்த வழக்கறிஞர்கள் 10 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

டாக்டர் பி முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், என்.குணசேகரன் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகளும்,

வழக்கறிஞர்கள் நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப் குமார், எல்லப்பன் மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜ்னிஷ் பதி, கே.அப்பாதுரை மற்றும் ராமசாமி அனிதா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கொலீஜியத்தின் இந்த 19 புதிய நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் முறைப்படி ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்ட பின், இவர்கள் அனைவரும் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்பார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com