காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாமல், முசரவாக்கம், துணை மின் நிலையங்களை சுற்றி உள்ள தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், ஒழக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்படும் என காஞ்சிபுரம் தெற்கு செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறைமலைநகர் என்.எச்.1, பேரமனூர் சாமியார் கேட், பாவேந்தர் சாலை, என்.எச்.2, விரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com