மத்திய மந்திரியின் மகள் கொரோனாவுக்கு பலி

யோகிதா சோலங்கி மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜனதாவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

இந்தூர்:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியான தாவர்சந்த் கெலாட்டின் மகள், யோகிதா சோலங்கி (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் உஜ்ஜைனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு உடல்நிலை மோசமடையவே இந்தூரில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி யோகிதா நேற்று மரணமடைந்தார்.

தீவிர தொற்று காரணமாக அவரது நுரையீரலில் 80 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவியிருந்ததாகவும், உயிர்காக்கும் மருந்துகள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

யோகிதா சோலங்கி தனது கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜனதாவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com