விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்

அனைத்து பிரச்சினை தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர்
விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்துக்காக குவிந்துள்ளனர். அவர்களை டெல்லியில் அனுமதிப்பது தொடர்பாக போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரும் மோதலும் நடந்தது.

இந்நிலையில், விவசாயிகள் இந்தப் போராட்டத்தை விட்டுவிடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விவசாய சங்கத்தினருடன் அரசு ஏற்கனவே பேசி வருகிறது. வரும் 3-ம் தேதி இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறோம்’ என்று கூறினார்.

எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com