ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு- இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் வரும் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7  நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜி7 மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.

‘உலகின் மருந்தகம்’ என்ற வகையில், இந்தியா ஏற்கனவே உலகின் 50% க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தொற்றுநோய்க் காலத்தில் பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டதாகவும் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். 

வரும் 26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, தொற்று அதிகரித்ததால் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com