தமிழக தொழில்துறை அமைச்சராக பதவியேற்கும் தங்கம் தென்னரசு

கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தங்கம் தென்னரசு, இம்முறை தொழில்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
Published on

சென்னை:

தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தங்கம் தென்னரசு (54) தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

என்ஜினீயரான இவரது சொந்த ஊர் மல்லாங்கிணறு ஆகும். விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

ஏற்கனவே 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், தற்போது 5-வது முறையாக வெற்றி பெற்று, இம்முறை தொழில்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com