கங்குலி நலம்பெற வேண்டி மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுரவ் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கங்குலி மணல் சிற்பம்
கங்குலி மணல் சிற்பம்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் சவுரவ் கங்குலி மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் வரைந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com