நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்

தமிழகத்தில் நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு மாணவ- மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கு விண்ணப் பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 16-ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து, பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்டு 6-ந் தேதிக்குள்ளாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் 16 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com