நல்லம்பள்ளி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

நல்லம்பள்ளி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல்
மிரட்டல்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியை அடுத்த வட்டாளிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 37). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அய்யாசாமி (34), மல்லிகேஷ் (37) ஆகியோரிடையே வழித்தட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அய்யாசாமி மற்றும் மல்லிகேஷ் ஆகியோர் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கினர். இதுபற்றி அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யாசாமி, மல்லிகேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com