

கே.வி.குப்பம்:
மேல் காவனூர் பகுதியில் உள்ள பாலாற்று பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவன் (வயது 62), செல்வம் (39), அருண் ஆகியோ மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை
பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அதில் தேவன், செல்வம் ஆகியோரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அருண் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்து பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அருணை போலீசார் தேடி வருகின்றனர்.