

தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.என்.நேருவுக்கு வயது 69. தி.மு.க. முதன்மை செயலாளராக உள்ளார். 1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட்ட நேரு பெற்ற வெற்றியின் மூலம் பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.