தமிழகத்தை மு.க.ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும்- கி.வீரமணி பேச்சு

அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதாவின் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மு.க.ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கி வீரமணி பேசியுள்ளார்.
கி.வீரமணி
கி.வீரமணி
Published on

லால்குடி:

லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், கொரோனா நோய் தொற்று மிகக் கொடியது. 

அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதாவின் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மு.க.ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும். ஆகவே, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கலை மற்றும் தி.மு.க. ஒன்றிய, நகர மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com