இடுக்கி, கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
கனமழை
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மலையோர மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது,

X

Maalai Malar
www.maalaimalar.com