

சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,410 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயன் அடைவர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.