அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் கூறுவது முற்றிலும் பொய் - முக ஸ்டாலின் பேச்சு

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் கூறுவது முற்றிலும் பொய் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் 2021  மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் போதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சியில் திமுக சார்பில் இன்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். 

கிராமசபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசியதாவது:-

* அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் கூறுவது முற்றிலும் பொய்.

* சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

* மக்கள் வரிப்பணத்தை வீணாக விளம்பரம் செய்கிறார்கள்.

* திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆடிப்போயுள்ளனர்.

* என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள்

என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com